இரணைமடு குளத்திலிருந்து சந்தேகநபர் சடலமாக மீட்பு: வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்திடம் கையளிப்பு

இரணைமடு குளத்திலிருந்து சந்தேகநபர் சடலமாக மீட்பு: வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்திடம் கையளிப்பு

இரணைமடு குளத்திலிருந்து சந்தேகநபர் சடலமாக மீட்பு: வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்திடம் கையளிப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Nov, 2016 | 8:09 pm

யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர், இரணைமடு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்திடம் இன்று கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்தது.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் இரணைமடு குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், சடலத்தில் 16 உள்காயங்களும், 6 வெளிக்காயங்களும் காணப்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, இந்த சம்பவமானது கொலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கு விசாரணையை யாழ். மேல் நீதிமன்றதிடம் ஒப்படைக்குமாறு கிளிநொச்சி நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இன்று உத்தரவிட்டார்.

இதன் பிரகாரம், சந்தேகநபர்களின் விளக்கமறியல் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருட்டு சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாரால் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமற்போயிருந்த நிலையில், இரணைமடு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து, சம்பவம் இடம்பெற்றபோது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய எட்டு பொலிஸாருக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்