வவுனியாவில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

வவுனியாவில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

வவுனியாவில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

23 Nov, 2016 | 12:52 pm

வவுனியாவில் மரக்காரம்பளை பகுதியில் ஜேர்மனி நாட்டின் பிரஜாவுரிமை பெற்ற ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 4 சந்தேகநபர்களையும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மரகாரம்பளை, மகிழங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த ஒருவரே வெட்டுக் காயங்களுடன் நேற்ற காலை சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்