கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றல்

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றல்

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றல்

எழுத்தாளர் Bella Dalima

23 Nov, 2016 | 4:48 pm

வட மாகாணத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களிடமிருந்து மேலும் சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொலைச் சம்பங்களுடன் தொடர்புபட்ட நான்கு பேர், கடந்த 17 ஆம் திகதி வவுனியாவில் கைது செய்யப்பட்டனர்.

முகமூடி அணிந்தவண்ணம் வட மாகாணத்தில் பல பகுதிகளில் வாள்களைக் காண்பித்து சந்தேகநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரிவந்துள்ளது.

அதற்கமைய, கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான நீதிமன்ற அனுமதி பெற்றப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவங்களுடன் மேலும் பல சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, செட்டிக்குளம் மற்றும் புளியங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்