இணையத்தில் வெளியான பாகுபலி 2 இன் இறுதிக்கட்ட காட்சிகள் தொடர்பில் படத்தின் வீடியோ எடிட்டர் கைது

இணையத்தில் வெளியான பாகுபலி 2 இன் இறுதிக்கட்ட காட்சிகள் தொடர்பில் படத்தின் வீடியோ எடிட்டர் கைது

இணையத்தில் வெளியான பாகுபலி 2 இன் இறுதிக்கட்ட காட்சிகள் தொடர்பில் படத்தின் வீடியோ எடிட்டர் கைது

எழுத்தாளர் Staff Writer

23 Nov, 2016 | 11:54 am

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா என பலர் நடிப்பில் சரித்திர படமாக பாகுபலி வெளியாகி உலகளவில் பயங்கர வெற்றி பெற்றது.

இன்னும் நன்கு போய்க்கொண்டிருக்கும் நிலையில் முதல் பாகத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என ராஜமௌலி விட்டுச்சென்ற கேள்விக்கு பதிலுக்காக ரசிகர்கள் 2 ஆம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பாகுபலி 2 இல் அனுஷ்கா, பிரபாஸ் நடிக்கும் இறுதிக்கட்ட 2 போர்க்காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிரவைத்தது.

இது வட்ஸ்அப்பில் வெளியாகியது என தகவல் அறிந்த படக்குழு உடனே அதை இணையத்திலிருந்து நீக்கிவிட்டு, தீவிர விசாரணையை தொடர்ந்தது.

தீவிர பாதுகாப்பிற்கு நடுவே எப்படி இது நிகழ்ந்தது என கடுமையாக விசாரித்து பின் நம்பிக்கை துரோகம் செய்ததற்காக இதன் வீடியோ எடிட்டர் மீது ஹைதராபாத் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அவரை கைது செய்துள்ளார்கள்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்