அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி திரட்டப்பட்ட கையெழுத்துக்கள் ஜனாதிபதி, பிரதமர் செயலகங்களில் கையளிப்பு

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி திரட்டப்பட்ட கையெழுத்துக்கள் ஜனாதிபதி, பிரதமர் செயலகங்களில் கையளிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Nov, 2016 | 9:39 pm

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயலகங்களில் இன்று சமர்ப்பிக்கப்பட்டன.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, நாடு முழுவதும் சுமார் 3 இலட்சம் கையெழுத்துக்களை தேசிய அமைப்பு சேகரித்திருந்தது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினர், கொள்ளுப்பிட்டியிலிருந்து ஜனாதிபதி
செயலகம் வரை பேரணியாக சென்றனர்.

நாடு முழுவதுமிருந்து பெறப்பட்டுள்ள கையெழுத்துக்களும் மகஜரொன்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயலகங்களில் இன்று சமர்ப்பிக்கப்பட்டன.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அரசியல் ரீதியாகவே தீர்மானிக்கப்பட வேண்டுமெனவும் அதற்கான ஆதாரங்கள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்