அக்கரப்பத்தனை, டயகம ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

அக்கரப்பத்தனை, டயகம ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

அக்கரப்பத்தனை, டயகம ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

23 Nov, 2016 | 7:32 am

ஹட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளது.

ஹட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள பாலம் ஒன்றில் அரைவாசி பகுதி இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது.

மேலும் அவ்வீதியினூடாக அக்கரப்பத்தனை மற்றும் டயகம ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து போடைஸ் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு இவ்வீதியினூடாக பாரவூர்த்திகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேற்படி பாலம் உடைந்துள்ளதால் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அட்டன் பொலிஸார் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்