சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையங்களில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்

சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையங்களில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்

சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையங்களில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2016 | 11:30 am

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையங்களில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

கூடுதலாக டெங்கு பரவும் அபாயம் காணப்படும் மேல் மாகாணத்தில், பரீட்சை நிலையங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டார்.

சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையங்களை சூழவுள்ள பகுதிகளில் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக புகை விசுறும் நடவடிக்கைகளை கல்வி அமைச்சின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்பொருட்டு சகல பிராந்திய சுகாதாரப் பிரிவுகளையும் தெளிவுபடுத்தியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

இதேவேளை, 2016 ஆம் ஆண்டு, அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் பதிவாகக்கூடிய ஒரு ஆண்டாக காணப்படுவதாக அவர் மேறும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்