ஐந்து பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

ஐந்து பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

ஐந்து பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2016 | 12:45 pm

ஐந்து பிரதான நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிலவும் மழையுடனான வானிலையுடன் நாட்டிலுள்ள ஏனைய நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் 33 வீதம் உயர்வடைந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், நெற் செய்கைக்குத் தேவையான நீர் தற்போது நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க கூறியுள்ளார்.

குறிப்பாக பராக்கிரம சமுத்திரம், மின்னேரியா, இங்கினிமிட்டிய, தெதுருஓயா மற்றும் லுணுகம்வெஹெர ஆகிய பிரதான நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இதற்கு சமாந்திரமாக ஏனைய சிறிய குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதுடன், 18 சிறிய குளங்களின் மூலம் செய்கைகளுக்காக நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இம்முறை மழைவீழ்ச்சி குறைவாகவே கிடைத்து வருவதால், இப்போது முதல் பெரும்போக செய்கைகளை ஆரம்பிக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெரும்போக செய்கையை மேற்கொள்வதில் தாமதம் நிலவுமாயின் இலங்கையின் உணவு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்