ஏழு வகையான போக்குவரத்து குற்றங்களுக்கு 25,000 ரூபா தண்டப்பணம்

ஏழு வகையான போக்குவரத்து குற்றங்களுக்கு 25,000 ரூபா தண்டப்பணம்

ஏழு வகையான போக்குவரத்து குற்றங்களுக்கு 25,000 ரூபா தண்டப்பணம்

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2016 | 8:19 pm

வீதி ஒழுங்குகளை மீறுவோரிடம், ஏழு வகையான குற்றச்சாட்டுகளின் கீழ், அபராத தொகையை 25,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, காப்புறுதி ஆவணங்கள் இல்லாமை, சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், இடப்புறமாக முந்திச் செல்ல முற்படுதல், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தல், பாதுகாப்பற்ற வகையில் ரயில் கடவைகள் ஊடாக பயணித்தல், அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை செலுத்துவதற்கு இடமளித்தல் ஆகிய ஏழு வகையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த யோசனை போக்குவரத்து அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது சபையில் சமர்பிக்கப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்