அரச தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் 2 விருதுகளை சுவீகரித்தது நியூஸ்பெஸ்ட்

அரச தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் 2 விருதுகளை சுவீகரித்தது நியூஸ்பெஸ்ட்

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2016 | 10:09 pm

இம்முறை அரச தொலைக்காட்சி விருது வழங்கல் விழாவில் நியூஸ்பெஸ்ட் 2 விருதுகளை சுவீகரித்துள்ளதுடன், சக்தி ரிவியும் விருதொன்றை பெற்றுள்ளது.

அரச தொலைக்காட்சி விருது வழங்கல் விழாவில் சிறந்த புலனாய்வு செய்தி அறிக்கையிடல் மற்றும் செய்தி அறிக்கையிடலுக்கான விருதினை சக்தி நியூஸ்பெஸ்டின் இராசதுரை ஜெயரூபன் சுவீகரித்துக் கொண்டார்.

சிறந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கான விருதினை சக்தி ஸ்போட்ஸ்பெஸ்டின் சாகா தொகுப்பிற்காக இராஜலிங்கம் திரிஷானோ வென்றார்.

இதுதவிர சிறந்த மல்டி கமரா தொகுப்பிற்கான விருதை சக்தி ரிவியின் எம்.எப் சியாவுர் ஹஸன் சுவீகரித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்