அமைச்சர்களான திகாம்பரம் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் நீதிமன்றில் ஆஜர்

அமைச்சர்களான திகாம்பரம் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் நீதிமன்றில் ஆஜர்

அமைச்சர்களான திகாம்பரம் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் நீதிமன்றில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2016 | 8:03 pm

அமைச்சர் பி.திகாம்பரம் மற்றும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின் போது அமைச்சர் பி. திகாம்பரத்தின் வாகனம் மறிக்கப்பட்டதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளுக்காகவே அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இரண்டு தரப்பினரினதும் கருத்துக்களை கேட்டறிந்து கொண்ட ஹட்டன் மேல் நீதமன்ற நீதிபதி பிரசாத் லியனகே, சட்ட மாஅதிபரின் ஆலோசனை கிடைக்காமையினால் மனு மீதான விசாரணைகளை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்