அங்கும்புர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபர் கைது

அங்கும்புர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபர் கைது

அங்கும்புர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

21 Nov, 2016 | 2:30 pm

கண்டி, அங்கும்புர பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காரில் சென்றிருந்த ஆயுதக் குழுவொன்றினால் வீதியோரத்தில் நின்றிருந்த இருவர் மீது நேற்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெபிலகொல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தார்.

கைதுசெய்யப்பட்ட 23 வயதான சந்தேகநபரை கண்டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்