புதுமைகள் படைக்கும் சக்தி FM இற்கு இன்று 18 ஆவது பிறந்த நாள்

புதுமைகள் படைக்கும் சக்தி FM இற்கு இன்று 18 ஆவது பிறந்த நாள்

புதுமைகள் படைக்கும் சக்தி FM இற்கு இன்று 18 ஆவது பிறந்த நாள்

எழுத்தாளர் Staff Writer

20 Nov, 2016 | 5:27 pm

நேயர்களின் நாடித் துடிப்பறிந்து முதற்தரமான நிகழ்ச்சிகளை படைத்துவரும் சக்தி எப்.எம், தனது 18 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றது.

சக்திக்கு 18 இளமை, இனிமை, புதுமை….

தமிழ் பேசும் மக்களின் சக்தியாய் விளங்கும், சக்தி எப்.எம் இன் 18ஆவது பிறந்த நாளை முன்னிட்டு,
இன்று காலை தெபானம கலையகத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றன.

சக்தி எவ்.எம் இன் 18 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நெருப்புடா ஹிப்பொப் இசை நிகழ்ச்சி, இரத்மலானை
ஸ்டெய்ன் கலையகத்தில் நேற்று (19) பிரமாண்டமாக நடைபெற்றது.

1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி வானொலிகளில் புரட்சிகரமான மாற்றத்துடன் சக்தி எப்.எம் உதயமாகியது.

நிகழ்ச்சிகளில் மாத்திரமல்லாது மக்கள் சேவையின் மூலமாகவும் நேயர்களின் மத்தியில் ஒரு தனியிடத்தை
தக்க வைத்திருக்கும் சக்தி எப்.எம், நேயர்களின் மனங்களை கவர்ந்து தொடர்ந்தும் வெற்றி நடை போடுகின்றது.

ஊடகத்துறையின் புரட்சியாளனாய், புதுமைகள் பல படைப்பதுடன் மக்கள் சேவையையும் தொடர, சக்தி எப்.எம் இற்கு நியூஸ்பெஸ்டின் வாழ்த்துக்கள்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்