ISIS இல் இலங்கையர்கள் இணைவு: விஜேதாஸ ராஜபக்ஸவின் கருத்து தொடர்பில் முஸ்லிம் பேரவை அறிக்கை

ISIS இல் இலங்கையர்கள் இணைவு: விஜேதாஸ ராஜபக்ஸவின் கருத்து தொடர்பில் முஸ்லிம் பேரவை அறிக்கை

எழுத்தாளர் Bella Dalima

19 Nov, 2016 | 3:14 pm

ISIS ஆயுததாரிகள் குழுவில் இலங்கையைச் சேர்ந்த 32 பேர் இணைந்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ வெளியிட்ட கருத்து தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.

சிரியாவில் ISIS இல் இணைந்ததாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு தாம் தயாராகவுள்ளதாக முஸ்லிம் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மியதுல் உலமா சபை, முஸ்லிம் பேரவை உள்ளிட்ட தமது அனைத்து அமைப்புகளும் இந்த விடயம் தொடர்பிலான ஆய்வுகளுக்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் முஸ்லிம் பேரவை தமது அறிக்கையூடாக நீதி அமைச்சரை வலியுறுத்தியுள்ளது.

சமூகத்தில் பிரபலமான 4 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் சிரியாவிற்கு சென்று ISIS அமைப்புடன் செயற்பட்டு வருவதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்