வடக்கின் மூன்று மாவட்டங்களில் பாடசாலை நேர அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளத் தீர்மானம்

வடக்கின் மூன்று மாவட்டங்களில் பாடசாலை நேர அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளத் தீர்மானம்

வடக்கின் மூன்று மாவட்டங்களில் பாடசாலை நேர அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

19 Nov, 2016 | 4:21 pm

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளுக்கான நேர அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, காலை 7.30 தொடக்கம் பிற்பகல் 1.30 வரை பாடசாலையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்விப் பணிப்பாளர் செல்லத்துரை உதயகுமார் தெரிவித்தார்.

இதற்கான அனுமதியை மாகாணக் கல்வி அமைச்சினூடாகப் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த தீர்மானத்தை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் காலை 7.30ற்கு பாடசாலை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுகின்ற போதிலும் வட மாகாணத்தின் குறித்த மூன்று மாவட்டங்களில் மாத்திம் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படுதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்