மலேசியப் பிரதமர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் (Photos)

மலேசியப் பிரதமர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் (Photos)

மலேசியப் பிரதமர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் (Photos)

எழுத்தாளர் Bella Dalima

19 Nov, 2016 | 6:14 pm

ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலைநகர் கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச நிதியில் இருந்து நஜீப் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்குகளுக்கு 70 கோடி அமெரிக்க டொலர்கள் மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரசாக் மறுத்தபோதிலும் மலேசியாவில் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகின்றது.

இந்த நிலையில், ரசாக் பதவி விலக வலியுறுத்தி போராட்டக்காரர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் மஞ்சள் நிற ஆடை அணிந்து இன்று தலைநகர் கோலாலம்பூரில் திரண்டு, பிரதமருக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த ‘பெர்சிக்’ அமைப்பின் முக்கிய உறுப்பினர்களை பொலிஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த 7,000 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

1 2 3 4 5 6 7 8 1016078512

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்