பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது

பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது

பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

19 Nov, 2016 | 3:42 pm

பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தனியார் பஸ் ஊழியர்களின் சங்கம் குறிப்பிட்டது.

நேற்று முதல் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பினூடாக தமது கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக சங்கத்தின் ஏற்பாட்டாளர் யு.கே. குமாரரத்ன தெரிவித்தார்.

வீதி விதிமுறைகளை மீறுவோருக்கு 2500 ரூபா அபராதம் விதிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று காலி வீதியில் பஸ் ஊழியர்களால் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பிலிருந்து கதிர்காமம், தங்காலை, மாத்தறை, காலி மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளுக்கான தனியார் பஸ்கள் நேற்று சேவையில் ஈடுபடாததால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்