கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

எழுத்தாளர் Bella Dalima

19 Nov, 2016 | 3:30 pm

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.

தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனைத் தவிர கொட்டிகாவத்தை, முல்லேரியாவ பிரதெச செயலாளர் பிரிவுகளிலும் இரத்மலானை பகுதியிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்