கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யத் தீர்மானம்

கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

19 Nov, 2016 | 8:43 pm

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வது குறித்த கலந்துரையாடலொன்று மாத்தளையில் இன்று நடைபெற்றது.

கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம், நவ சமசமாஜக் கட்சி, ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சம்மேளனம், ஐக்கிய சோசலிசக் கட்சி, சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, கம்யூனிஸ்ட் தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பன இணைந்து இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திற்கு
எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்காக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களிடம் சுமார் 50 ஆயிரம் கையெழுத்துக்களைப் பெற்று, கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கு இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்