பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 Nov, 2016 | 3:02 pm

நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அபராத அதிகரிப்பு தொடர்பில் நிலவிய சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தமது ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்கள் என அகில இலங்கை பஸ் ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் யூ.கே.குமாரரத்ன தெரிவித்தார்.

அதற்கமைய, அளுத்கம பகுதியைக் கேந்திரப்படுத்தி நேற்று முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அளுத்கமையூடாகப் பயணித்த நெடுந்தூர சேவை பஸ் ஒன்றின் மீது நேற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.

அத்துடன், நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜீ.ஏ.எல் ஹேமச்சந்திர குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்