ஆவா குழுவிற்கு LTTE முத்திரை குத்தி நாட்டை சீர்குலைக்க சிலர் முயற்சி – விஜேதாச ராஜபக்ஸ

ஆவா குழுவிற்கு LTTE முத்திரை குத்தி நாட்டை சீர்குலைக்க சிலர் முயற்சி – விஜேதாச ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

18 Nov, 2016 | 8:38 pm

ஆவா குழுவிற்கு LTTE முத்திரையைக் குத்தி நாட்டை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆவா குழுவில் கொள்ளையர்கள் சிலர் உள்ளபோதும் அவ்வாறான பாதாளக் குழுக்கள் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளதாக விஜேதாச ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.

அவ்வாறானவர்கள் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஆவா குழு உறுப்பினர்கள் தொடர்பில் தாம் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்