குருநாகல் துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதாக சந்தேகநபர் பாதாள குழுத் தலைவர் என பொலிஸார் தெரிவிப்பு

குருநாகல் துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதாக சந்தேகநபர் பாதாள குழுத் தலைவர் என பொலிஸார் தெரிவிப்பு

குருநாகல் துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதாக சந்தேகநபர் பாதாள குழுத் தலைவர் என பொலிஸார் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2016 | 9:52 am

குருநாகல் பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாதாள குழு தலைவராக செயற்பட்டு வந்துள்ளதுடன், போதைப்பொருள் விநியோகத்திலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த ரொஹா என அழைக்கப்படும் ரொஷான் சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர் கடந்த காலத்தில் மொரட்டுவை, இரத்மலானை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதியகளில் இடம்பெற்ற பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புபட்டவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடந்த காலத்தில் அத்திடிய பகுதியில் காரில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்ற நபரும் பாதாள குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

குருணாகல் – புத்தளம் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் நேற்று முந்தினம் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்ற போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தப்பி சென்ற மற்றைய சந்தேகநபரை தேடி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளனர்.

இதன்போது குருணாகல் , வதுராகல தர்மபால மாவத்தையை சேர்ந்த 59 வயதுடைய உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்