68 வருடங்களுக்குப் பின் தோன்றவுள்ள Supermoon ஐ பார்வையிடுவதற்கு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்

68 வருடங்களுக்குப் பின் தோன்றவுள்ள Supermoon ஐ பார்வையிடுவதற்கு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்

68 வருடங்களுக்குப் பின் தோன்றவுள்ள Supermoon ஐ பார்வையிடுவதற்கு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2016 | 5:11 pm

68 வருடங்களின் பின்னர் Supermoon எனும் பெரு முழு நிலவை பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கை வாழ் மக்களுக்கு கிட்டவுள்ளது.

இதன்போது நிலா 14 மடங்கு பெரியதாக கட்சியளிக்கும் என ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் நவீன தொழில்நுட்ப பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சராஜ் குணசேகர தெரிவித்தார்.

இதற்கு முன்னர் 1948 ஆம் ஆண்டிலேயே Supermoon எனும் பெரு முழு நிலா தோன்றியிருந்தது.

இத்தகைய பெரு முழு நிலாவை மீண்டும் 2034 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 25 ஆம் திகதியே காண்பதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளது.

மேலும் 2034 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இவ்வாறான சுப்பர் மூனை பார்வையிட முடியும்.

இன்றைய தினம் நிலவை புவிக்கு அண்மையில் காண்பதற்குரிய சந்தர்ப்பம் ஏற்படவுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் சூரியன், புவி மற்றும் சந்திரன் ஆகியன ஒரே நேர்கோட்டில் அமையப்பெறும் என இலங்கை விண்வெளி ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்