மொரட்டுவை வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து இன்று முதல் வழமைக்கு

மொரட்டுவை வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து இன்று முதல் வழமைக்கு

மொரட்டுவை வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து இன்று முதல் வழமைக்கு

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2016 | 4:39 pm

மொரட்டுவை வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த கடல் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து இன்று முதல் வழமைக்குத் திரும்பவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மொரட்டுவை மற்றும் இரத்மலானை இடையிலான ரயில் மார்க்கத்தில் பாலமொன்று புனரமைக்கப்படுவதன் காரணமாக கடந்த 11 ஆம் திகதி கரையோர ரயில் சேவைகள் மொரட்டுவை வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த பாலத்தின் புனர்நிரமாண பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளமையினால் இன்று முதல் மீண்டும் கொழும்பு தொடக்கம் மாத்தறை வரை ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்