மக்கள் சக்தி திட்டத்தின் கீழ் நொச்சியாகம, பிபிலை பகுதிகளில் 4 மக்கள் நலத்திட்டங்கள் அங்குரார்ப்பணம்

மக்கள் சக்தி திட்டத்தின் கீழ் நொச்சியாகம, பிபிலை பகுதிகளில் 4 மக்கள் நலத்திட்டங்கள் அங்குரார்ப்பணம்

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2016 | 9:05 pm

குறைப்பாடுகளுக்கு மத்தியில் சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு பொது வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, “நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி” இன்று நொச்சியாகம மற்றும் பிபிலை பகுதிகளில் 4, மக்கள் நலத்திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது.

நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி திட்டத்தின் கீழ், நொச்சியாகம, குசும்புர போதிமலு விஹாரைக்கான சுகாதார நலமேம்பாட்டுத் திட்டம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

பிபிலை ஹெலஅராவ, குருஅம்பே கிராமத்தின் ஒரு மூலையில் அமைந்துள்ள கிணற்றிலிருந்தே சுமார் 40 குடும்பங்கள் நீரைப் பெற்றுக் கொள்கின்றனர்.

சுத்திகரிக்கப்படாத நீரை பயன்படுத்துவதால் கிராமத்திலுள்ள மக்கள் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிட்டது

இதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் முகமாக, நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி திட்டத்தின் கீ்ழ், இந்த மக்களுக்காக இன்று குடிநீர் விநியோகத்திட்டமொன்று கையளிக்கப்பட்டது.

பத்மா விஜேதுங்க என்ற, பெண் நன்கொடையாளர் ஒருவர் இந்த திட்டத்திற்கான பங்களிப்பை நல்கியிருந்தார்.

பிபிலை, சிகுராலந்த கிராமத்திலுள்ள சுமார் 150 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், கிராமத்திற்கு வெகு தொலைவிலிருந்தே தங்களின் குடிநீருக்கான தேவையைப் பூர்த்திசெய்து கொண்டனர்.

இந்த மக்கள் பிபிலை மீகஹராவ வாவியிலிருந்தே நீரைப் பெற்றுக் கொள்கின்றனர்.

மக்கள் சக்தி திட்டத்தின் கீழ், சிகுராலந்த கிராமத்திற்கு இன்று குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் வரம் கிடைத்துள்ளது.

இந்த திட்டத்திற்கு ஏ.ஏ. கருணாரத்ன மற்றும் இந்திரா சுபசிங்க ஆகியோர் பங்களிப்பு செய்திருந்தனர்.

பிபிலை இலுகாபத்தன கிராமத்திலுள்ள 50 குடும்பங்களுக்கான நீர் வசதியும் இன்று கையளிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியா – இலங்கை மலாயர் சங்கம் என்பன இந்த திட்டத்திற்கு அனுசரணை வழங்கியிருந்தன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்