பொருளாதார குழுவே இன்று நாட்டை நிர்வகிக்கின்றது – அநுரகுமார திசாநாயக்க

பொருளாதார குழுவே இன்று நாட்டை நிர்வகிக்கின்றது – அநுரகுமார திசாநாயக்க

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2016 | 7:14 pm

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, கொழும்பில் நேற்று (13) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க கருத்து தெரிவிக்கையில்…

[quote]ஒரு கிலோகிராம் சீனியை இரண்டு ரூபாவால் குறைத்துள்ளனர். மூடை கணக்கில் வீடுகளில் சீனி பயன்படுத்துகின்றார்கள் என இவர்கள் எண்ணியுள்ளனர். இரண்டு ரூபாவால் சீனியை குறைத்தமைக்கு பதிலாக, ஒரு கிலோகிராம் சீனி வாங்கும் பொழுது ஒரு கரண்டி சீனி மேலதிகமாக தரப்படும் என கூறியிருக்கலாம். ஒரு கிலோகிராம் நெத்தலியை 5 ரூபாவால் குறைப்பதாக கூறுகின்றனர். நெத்தலி 7,8 கிலோகிராம் வாங்கும் பொருளொன்று.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்