தேநீர் ஒரு கோப்பையின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு

தேநீர் ஒரு கோப்பையின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு

தேநீர் ஒரு கோப்பையின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2016 | 2:52 pm

நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு அமைவாக அனைத்து உணவுப் பொருட்களினது விலைகளையும் 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய தேநீர் ஒரு கோப்பையின் விலை 5 ரூபாவினால் உயர்த்தப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.

உணவகங்களில் தாயரிக்கப்படுகின்ற அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் தொழில் புரியும் வர்க்கத்தினரின் விருப்புக்குரிய பருப்பு ஒரு கோப்பையின் விலையையும் அதிகரிக்கவுள்ளதாக அசேல சம்பத் குறிப்பிட்டார்.

பருப்பின் விலை கடைக்கு கடை மாறுபடுவதன் காரணமாக, பருப்பு ஒரு கோப்பையின் விலை 5 தொடக்கம் 10 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்