கண்ணியா முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில்

கண்ணியா முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில்

கண்ணியா முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2016 | 6:51 pm

திருகோணமலை – கண்ணியா முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கண்ணியா, கிளிகுஞ்சுமலை பகுதியில் தாயும் 2 பிள்ளைகளும், நேற்று (13) முற்பகல் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டு சிறுமிகள் மற்றும் அவர்களின் தாய் ஆகியோர் பரிதாபமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் சிறுமிகளின் தந்தை நேற்று கைது செய்யப்பட்டு, திருகோணமலை மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்