உற்பத்திக் கொடுப்பனவை பெறுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு

உற்பத்திக் கொடுப்பனவை பெறுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு

உற்பத்திக் கொடுப்பனவை பெறுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2016 | 7:52 pm

சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உற்பத்தி கொடுப்பனவை பெறுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம் கடந்த ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

புதிய கூட்டு ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களுக்கான சம்பள முறைமை இவ்வாறு அமைந்துள்ளது.

அடிப்படை சம்பளம் – 500ரூபா
உற்பத்திக் கொடுப்பனவு – 140ரூபா
தேயிலை விலைக் கொடுப்பனவு – 30ரூபா
வருகைக் கொடுப்பனவு – 60ரூபா
மொத்தம் = 730ரூபா

இதனைத்தவிர, மேலதிகமாகப் பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோகிராம் கொழுந்திற்கும் 25 ரூபா வழங்கப்படும் என கூட்டு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உற்பத்தி கொடுப்பனவான 140 ரூபாவை பெறுவதாயின், 18 கிலோகிராம் கொழுந்து பறிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர்களின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில், முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் சுனில் பொஹொலியத்தவிடம் நாம் வினவினோம்.

தொழிலாளர்களுக்கான மேலதிக உற்பத்திக் கொடுப்பனவை சகல தொழிலாளர்களுக்கும் வழங்குவதற்கு ஏற்கனவே முதலாளிமார் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆயினும், இது தொடர்பான எவ்வித முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்