இரத்தினபுரி பொது வைத்தியசாலை வளாகத்திலுள்ள அனுமதியற்ற கடைகளை அகற்றுமாறு பணிப்புரை

இரத்தினபுரி பொது வைத்தியசாலை வளாகத்திலுள்ள அனுமதியற்ற கடைகளை அகற்றுமாறு பணிப்புரை

இரத்தினபுரி பொது வைத்தியசாலை வளாகத்திலுள்ள அனுமதியற்ற கடைகளை அகற்றுமாறு பணிப்புரை

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2016 | 5:00 pm

இரத்தினபுரி பொது வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற கடைகளை அகற்றுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாத அனுமதியற்ற கடைகளை அகற்றுவதுடன், அளவீட்டு பணிகளை மேற்கொண்ட பின்னர், அந்த காணியை அரசாங்கத்திற்கு சுவீகரிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரி வைத்தியசாலையின் அபிவிருத்திகள் தொடர்பில் சுகாதார அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது அமைச்சர் இந்த விடயங்களைக் கூறினார்.

இரத்தினபுரி பொது வைத்தியசாலை வளாகத்தினுள் அனுமதியின்றி 36 கடைகள் இயங்கி வருவதுடன், அவற்றை அகற்றுவதில் சிக்கல்கள் தோன்றியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்