வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவிப்பு

வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2016 | 8:55 pm

வரவு செலவுத்திட்ட யோசனைக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் பந்துல குணவரதன இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பில் தெரிவித்தார்.

பாரளுமன்ற உறுப்பினர் பந்துல குணவரதன தெரிவித்த கருத்து…

[quote]வரவு- செலவுத்திட்ட யோசனை முன்மொழியப்பட்ட தினத்தன்று நிதியமைச்சரால் வங்கிகளுக்கு எழுத்துமூல பணிப்புரையொன்று விடுக்கப்பட்டிருந்தது. இந்த கட்டண முறைமைகளுக்கு அமைவாக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட தயாராகுமாறு சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்களுக்கும் கூறியுள்ளார். நாட்டின் மொத்த நிதி முறைமை தொடர்பான நம்பிக்கை சிர்குலையும் வகையில் வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு நாம் விரைவாக உயர்நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளோம்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்