நீர் கட்டணத்தை அதிகரித்தமைக்கான உண்மையான நோக்கம் தொடர்பில் தொழிற்சங்கங்கள் கருத்து

நீர் கட்டணத்தை அதிகரித்தமைக்கான உண்மையான நோக்கம் தொடர்பில் தொழிற்சங்கங்கள் கருத்து

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2016 | 8:23 pm

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நீர் கட்டணத்தை அதிக்கரிப்பதற்கு தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச்சபை தீர்மானித்துள்ளது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபையின் தலைவர் கே.ஏ.அன்ஸாரின் கையொழுத்துடன் நவம்பர் 2 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கமைய நீர்க்கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டது.

அதன் பிரகாரம் சமுர்த்தி பயனாளிகள் அல்லாத குடும்பங்களுக்கு வீட்டுப் பாவனைக்கான நீர்க்கட்டணத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஐந்து அலகுகளுக்கான பாவனைக் கட்டணம் 8 ரூபாவாலும், மாதாந்த சேவைக் கட்டணம் 200 ரூபாவாகவும், 6 தொடக்கம் 10 வரையான அலகுகளுக்கு பாவனை கட்டணம் 8 ரூபாவாலும் மாதாந்த கட்டணம் 185 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் குறைந்த தொகையாக 208 ரூபாவால் நீர்க்கட்டடணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

11 தொடக்கம் 15 அலகுகள் வரையான பாவனைக் கட்டணம் 6 ரூபாவாலும் மாதாந்த கட்டணம் 180 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதுடன், 16 தொடக்கம் 20 அலகுகளுக்கான பாவனைக் கட்டணம் 12 ரூபாவாலும் மாதாந்த கட்டணம் 320 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

21 தொடக்கம் 25 அலகுகளுக்கான பாவனைக் கட்டணம் 17 ரூபாவாலும், மாதாந்த சேவைக்கட்டணம் 300 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

26 தொடக்கம் 30 அலகுகளுக்கான பாவனைக் கட்டணம் 26 ரூபாவாலும், மாதாந்த சேவைக்கட்டணம் 600 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மூன்று தடவைகளுக்கு ஒருமுறையே நீர்க்கட்டண பட்டியல் அதிகரிக்கப்படுகின்ற போதிலும் நீர் விநியோகத் திட்டங்களுக்கு அரசாங்கத்தினால் இம்முறை ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படாமையால் கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொழிற் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்