நியூஸ்பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்: அரசியலுக்கு அச்சுறுத்தல்

நியூஸ்பெஸ்ட் ஆசிரியர் தலையங்கம்: அரசியலுக்கு அச்சுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2016 | 8:48 pm

கடந்த வாரத்தில் உலகிலும் நாட்டிலும் சூடுபிடித்துள்ள சம்பவங்கள் தொடர்பில் நியூஸ்பெஸ்ட்டின் ஆசிரியர் தலையங்கம் இன்று ஆராய்கின்றது.

அரசியலுக்கு அச்சுறுத்தல்

கடந்து சென்றவாரம் எந்தளவு அபூர்வமானது.

அமெரிக்காவையும், சர்வதேச அரசியலையும் தலை கீழாமாற்றி. தொலைக்காட்சிகளில் மற்றும் வர்த்தகத்துறையில் கொடிகட்டிப் பறந்தவரினால் வௌ்ளைமாளிகையின் முலாசனத்திற்கு உரிமைகோரப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி நாட்டில் நிலவும் ஊழலுக்கு எதிராக கடும் தாக்குதலை நடத்தி 500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்களை இரத்து செய்தார்.

இது அரசியல் ரீதியாக புத்திசாதுர்யமிக்க தீர்மானமாகும்.
அதேபோன்று இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்தது.

அரசியலுக்கு புதிய வரவான ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகி அரசியல் நிபுணர்களின் எதிர்வுகூரலை பொய்பித்த போதிலும் இது தொடர்பில் எதிர்காலத்தில் அவர்கள் விமர்சனங்களை வெளியிடுவார்கள்.

இவையனைத்திலும் தெளிவான ஒரு காரணம் இருக்கின்றது.

டொனால்ட் ட்ரம்ப் அவரது எதிர்தரப்பு பிரஜையான ஹிலரி கிளின்டனை மாத்திரம் தோற்கடிக்கவில்லை. தேர்தலுக்கு முன்னர் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஒரு தலைப்பட்சமான ஊடகநிறுவனங்கள் மற்றும் செல்வந்த அரசியல் பொறிமுறையைும் சேர்த்து தோற்கடித்துள்ளார்.

ஜனநாயக கட்சியை மாத்திரமன்றி அவருடைய கட்சியான குடியரசுக்கட்சியையும் தோற்கடித்துள்ளார்.

நியூஸ்பெஸ்ட் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியவாறு ஒட்டுமொத்த அரசியல் செயற்பாடும் தற்போது சவாலுக்கு உட்பட்டுள்ளது. அதேபோன்று பாராம்பரிய அரசியலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மக்களின் எண்ணங்கள் கட்சி வரையறைகளை தாண்டி சென்றுவிட்டன.

இதனைமீண்டும் நாம் நினைவுகூருகின்றோம்.
அரசியல் கட்சிகள், மக்களின் அபிப்பிராயங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பண்பு நாளுக்கு நாள் அருகிவருகின்றது.

ஊழலுக்கு எதிரான அலையுடன் முன்னோக்கி நகர்ந்த இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் ஊழலுக்கு எதிரான கடுமையான தீர்மானம் முழு உலகினதும் பாரட்டை பெற்றுள்ளது.

இதன்மூலம் மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் ஒரு தெளிவான தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எனது மக்களுக்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்பதே அந்த பண்பாகும்.

இந்த நாணயத்தாள்களை இரத்து செய்வதற்கு நரேந்திரமோடி எடுத்த தீர்மானம் மிகவும் சிறந்த ஒன்றாக பாராட்டை பெற்றபோதும், இந்தியாவின் வறுமை, வறுமைக்கோட்டிலுள்ள மற்றும் நடுத்தர மக்கள் இந்த தீர்மானத்தினால் கைவிடப்பட்டுள்ள ஒருதோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான தனது கப்பலை மோடி மேலும் பலப்படுத்தாவிட்டால் தாம் மேற்கொண்ட புத்திசாதுரியமான தீர்மானம் வீணாகிவிடும்.

ஆயினும் அவரது தீர்மானத்தின் பிரகாரம் அவர் தைரியமிக்க மனிதராக பராட்டுக்குரியவராகின்றார்.

இந்த பின்புலத்தில் இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை பிரகடனப்படுத்தியது.

மக்களின் வரவு செலவுத்திட்டமாக அர்த்தம் கற்பித்தபோதிலும் இலங்கை பொருளாதாரத்தின் வரையறைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் வரம்பினால் இதனை மிகவும் கவனமாக ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

தற்போதைய அரசாங்கத்தினால் சர்வதேச நாணய நிதியத்தை எந்தவகையிலும் புறக்கணித்து செயற்படமுடியாது.

இதன்காரணமாக சமாந்தரமாக செல்லும் தேசிய அரசாங்கம் மீது சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாக கவனம் செலுத்தியுள்ளது.

ஆகவே நிதியமைச்சர் மற்றும் அரசாங்கம் தங்களின் சுயவிருப்பின் போது செயற்படுவதற்கு இடமளிக்கப்படுவதில்லை. இதுவே கசப்பான உண்மை.

இந்த அழுத்தத்தின் மத்தியில் ஒன்றுக்கு பின் ஒன்று முரணான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

உதாரணமாக உயர்தர மாணவர்களுக்கு டெப், மடிக்கணனிகளை வழங்க எடுத்த தீர்மானத்தை குறிப்பிடலாம்.

இவ்வாறான தீர்மானத்தை எடுத்தது யார்?

பாரியதொரு செலவீனம் ஏற்படுவதோடு டெப், மடிக்கணனிகளை வழங்குவதால் எவ்வித நன்மையும் கிடைக்கமாட்டாது.

மாணவர்களை கணனி மென்பொருட்களை உருவாக்குவதற்காக தாயார்படுத்துவதே எமது பொறுப்பாகவுள்ளது.

அவர்களது திறமையான செயற்பாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும்.

அரசியல்வாதிகள் தங்களின் செலவீனங்களை குறைக்காது மக்களுக்கு தங்களது செலவீனங்களை குறைக்குமாறு கூறுவதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

மேலிடத்திலிருந்து செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டும்.

நாட்டில் பொருளாதார பிரச்சினைகளை தோற்றுவித்தவர்களே அவற்றிற்கு தீர்வை காணும்போது அதற்கான இழப்பை தங்கள் மீது சுமத்துவது தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னர் அமொரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலரி கிளின்டனே வெற்றிபெறுவார் என நம்பப்பட்டது.

அவர் அது குறித்து நம்பிக்கை கொண்ட போதிலும் ஜனநாயகக்கட்சியின் வேட்புமனுவை பெற்றுக்கொள்வது இலகுவானகாரியமல்ல.

பேர்னி சென்டர்ஸ், கிளிங்டனுடன் தோலுக்கு தோல் போட்டியிட்டதால், அந்த வாய்ப்பு கிளின்டனிடம் இருந்து நழுவிப்போகும் சாத்தியம் ஏற்பட்டது.

சென்டர்ஸ், ட்ரம்பின் தேர்தல் பிரசாரங்களுக்கு ஈடான பெரும் எண்ணிக்கையானோரை உள்ளிடக்கிய தேர்தல் பிராசாரங்களை முன்னெடுத்திருந்தார்.

கிளின்டன் மயிரிழையில் தப்பினார். ஆனாலும் ட்ரம்பின் பாரம்பரியமற்ற உத்திகளால் அவர் முழுமையாக பின்னடைவை சந்தித்தார்.

பிரன்சிஸ் புகயாமாவால் எழுதப்பட்ட அரசியல் முறைமை மற்றும் அரசியல் வீழ்ச்சி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளவாறு பொறுப்புக்கூறும் செயற்பாடுகள் அரசியலின் அத்திவாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றளவில் அந்த அத்திவாரம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.

தங்களுக்குக் பொறுப்புக்கூறும் தன்மை இல்லாவிட்டால் வேறு ஒருவர் தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம் அவர் மக்களோடு இருப்பதாக அர்த்தம் கொள்ள முடியாது.

நவீன அரசாங்கம் ஒன்று மக்களின் அபிப்பிராயம் மற்றும் பொதுத்தேவைகளுக்கு உடனடியாக பதிலளிக்கவேண்டியுள்ளது.

ஆனால் நீண்டகால பிரபல கட்சியின் அரசியல் பொறிமுறை வீழ்ச்சியடைந்து செல்லும் தருணத்தில் இதனை எதிர்பார்க்க முடியாது.

எமது அரசியல்வாதிகளும் கட்சிகளும் இவற்றின் மூலம் பாடங்களை கற்றுக் கொள்வது சிறந்தது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட மாற்றம் பிரெக்சிட் போன்ற சம்பவங்களால் ட்ரம்ப், மரின்லே போன்ற நபர்களின் புதிய அரசியல் முறையின் அங்குசமாகும்.

அது கட்சி அரசியல் மற்றும் வாக்குறுதி அரசியல் என்பவற்றை நிராகரித்து முழுமையான அரசியல் முறைமைக்கு வழிகாட்டுவதாக அமையும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்