நியூஸிலாந்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நியூஸிலாந்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நியூஸிலாந்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2016 | 6:41 pm

நியூஸிலாந்தில் தெற்கு தீவொன்றில் இன்று 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கிலோ மீற்றர் தொலைவில் 7.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குடியிருப்புகள் மற்றும் கட்டடங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டமையால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் கூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2011 ஆம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 185 பேர் கொல்லப்பட்டதுடன், நகரின் மையப்பகுதி பேரழிவை சந்தித்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்