தேசிய நீரிழிவு தின பாதயாத்திரை ஜனாதிபதி தலைமையில்

தேசிய நீரிழிவு தின பாதயாத்திரை ஜனாதிபதி தலைமையில்

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2016 | 7:01 pm

தேசிய நீரிழிவு தின பாதயாத்திரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.

ஆரோக்கியமான நாளைய தினத்திற்காக இன்றே செயற்படுவோம் எனும் தொனிப்பொருளில் இந்த பாதயாத்திரையை சுகதார அமைச்சின் தொற்றாநோய்ப்பிரிவு உள்ளிட்ட சுகாதார தரப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.

நவம்பர் 14 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள தேசிய நீரிழிவு தினத்தை முன்னிட்டு இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை தகுதிகாண் பயிற்சிகளுக்கு முன்னதாக உரிய வைத்திய தொழில் சார்ந்தவராக மாறுவதற்கான அடிப்படை புரிந்துணர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்தார்.

அரச வைத்தியசங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பயிற்சிபட்டறை கொழும்பு ஆனந்தா கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

மேலும் சினிமா மற்றும் நாடக கலைஞர்களை பாராட்டும் சிக்னிஸ் கொளரவிப்பு மற்றும் விருதுவழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது.

இலங்கை கத்தோலிக்க சினிமா பேரவை இந்த விருது விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விழாவில் பேரரட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்