கழிவுகள் அகற்றப்படாமையால் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள யாழ். மக்கள்

கழிவுகள் அகற்றப்படாமையால் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள யாழ். மக்கள்

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2016 | 7:24 pm

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக கழிவுகள் அகற்றப்படாமையால் தாம் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாநகர சபையில் அமைய அடிப்படையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் கடந்த 7 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நிரந்தர நியமனம் கோரி முன்னெடுக்கப்படும் இந்த பணிப்பகிஷ்கரிப்பினால், யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகள் அகற்றப்படாதுள்ளன.

கழிவுகள் அகற்றப்படாதுள்ளதால், பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக, யாழ் நகரிலுள்ள வர்த்தகர்களும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்