கண்ணியா கிளிகுஞ்சுமலை பகுதியில் தாய் மற்றும் 2 பிள்ளைகள் வெட்டிக் கொலை

கண்ணியா கிளிகுஞ்சுமலை பகுதியில் தாய் மற்றும் 2 பிள்ளைகள் வெட்டிக் கொலை

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2016 | 5:22 pm

திருகோணமலை கண்ணியா கிளிகுஞ்சுமலை பகுதியில் தாயும் இரண்டு பிள்ளைகளும் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (13) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

08 வயதான சந்தியா, 11 வயதான காயத்திரி மற்றும் 32 வயதான நித்தியா ஆகியோரே வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

வாள் வெட்டுக்கு இலக்கான பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைக்கு பயன்படுத்தியாக சந்தேகிக்கப்படும் வாளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்