அமுலுக்கு வரும் வகையில் நீதித்துறை அதிகாரிகள் 70 பேருக்கு இடமாற்றம்

அமுலுக்கு வரும் வகையில் நீதித்துறை அதிகாரிகள் 70 பேருக்கு இடமாற்றம்

அமுலுக்கு வரும் வகையில் நீதித்துறை அதிகாரிகள் 70 பேருக்கு இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

13 Nov, 2016 | 5:32 pm

உடன் அமுலுக்கு வரும் வகையில் நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் 70 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வருடாந்த இடமாற்ற கொள்கைக்கு அமைவாக இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த இடமாற்றங்கள் தொடர்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இடமாற்றங்கள் 2017 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்