வாட்ஸ் அப்பில் Animated GIFs அனுப்பும் வசதி இணைப்பு

வாட்ஸ் அப்பில் Animated GIFs அனுப்பும் வசதி இணைப்பு

வாட்ஸ் அப்பில் Animated GIFs அனுப்பும் வசதி இணைப்பு

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2016 | 5:13 pm

சமூக வலைத்தளங்களில் முன்னிலை வகிக்கும் வாட்ஸ் அப்பில் (WhatsApp) தற்போது Animated GIFs அனுப்பும் வசதி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியானது iOS மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் உரையாடல்களின் போது இந்த Animated GIFs ஐ இணைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், ஏதேனுமொரு வீடியோவைக் கொண்டு 7 நொடிகளில் Animated GIFs ஆக மாற்றி மற்றவர்களுக்கு அனுப்பவும் முடியும்.

வாட்ஸ் அப் தமது புதிய beta version இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததன் பின்னர் இந்த Animated GIFs வசதியையும் இணைத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]st.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்