நாட்டின் அபிவிருத்திக்கு 8 பில்லியன் அமரிக்க டொலர்கள் அவசியம்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க

நாட்டின் அபிவிருத்திக்கு 8 பில்லியன் அமரிக்க டொலர்கள் அவசியம்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2016 | 8:07 pm

நாட்டின் அபிவிருத்திக்கு 8 பில்லியன் அமரிக்க டொலர்கள் அவசியம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டிற்கான வருமானம் 1432 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், 2017 ஆம் ஆண்டில் 1800 பில்லியன் ரூபாவாக வருமானம் அமைகிறது என்றும் தெரிவித்தார்.

செலவை விட அரசாங்கத்தின் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் அதன் பிரதிலாபத்தை கல்விக்கும் சுகாதாரத்திற்கும் வீட்டுத் திட்டத்திற்கும் வழங்கியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இதன் காரணமாக அடுத்த இரண்டு வருடங்கள் சிரமமாக இருக்கக்கூடும் எனவும் நாட்டின் அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்ல 8 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தேட வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்