நடிகை சபர்ணா ஆனந்த் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

நடிகை சபர்ணா ஆனந்த் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

நடிகை சபர்ணா ஆனந்த் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2016 | 4:54 pm

தென்னிந்தியத் தொலைக்காட்சி நடிகை சபர்ணா ஆனந்த், கையை அறுத்துக்கொண்டு உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது சடலத்தை, உயிரிழந்த மூன்று நாட்களின் பின்னர் அழுகிய நிலையில் மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கையை அறுத்துக் கொண்ட நிலையில் சடலம் காணப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சடலம் நிர்வாண நிலையில் காணப்பட்டதால், சபர்ணா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது எவரேனும் அவரைக் கொலை செய்தனரா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சபர்ணாவின் உயிரிழப்பு சின்னத்திரை நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சபர்ணா, பி.எஸ்சி. சைக்காலஜி படித்தவர்.

சின்னத்திரை மட்டுமல்லாது சினிமாவிலும் நடித்துள்ள சபர்ணா, நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சபர்ணா சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் தங்கியிருந்தார். அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வரவே அருகில் வசிப்பவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

தனது ஆண் நண்பர் பிரிந்த கவலையில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்