திருகோணமலையில் ”மக்கள் சக்தி, மக்கள் அணி” ஆரம்பம்

திருகோணமலையில் ”மக்கள் சக்தி, மக்கள் அணி” ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2016 | 10:01 pm

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் வகையிலான ‘மக்கள் சக்தி, மக்கள் அணி” திருகோணமலையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடு முழுவதும் கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வு வழங்கும் வகையில்,
”மக்கள் சக்தி மக்கள் அணி” தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டுவதற்காக நியூஸ்பெஸ்ட் குழுவினர் நேற்றும் இன்றும் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தனர்.

மக்களின் அழைப்பின் பேரில் இன்று காலை திருகோணமலை மாவட்டத்தின் மேன்கமம் மற்றும் பாலத்தோப்பு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்த நியூஸ்பெஸ்ட் குழாத்தினர் அங்கு மக்கள் அணியை உருவாக்கினர்.

இதேவேளை, மக்கள் சக்தி மக்கள் அரங்கம் மூதூர் பாலதோப்பூர் ஷாகிரா வித்தியாலயத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அணியின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் இந்த மக்கள் அணி மாநாட்டில் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு மக்கள் அணியினருக்கும் இங்கு அவர்களின் கிராமம் தொடர்பில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் மூன்றினை முன்மொழியும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இந்த மாநாட்டில் மூதூர் பிரதேச செயலாளரின் பிரதிநிதியாக தோப்பூர் கிராம சேவகரும் தோப்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் நியூஸ்பெஸ்ட் குழாத்தினரும் கலந்து கொண்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்