தாதியைத் தூற்றிய வைத்திய அதிகாரிக்கு எதிராக திருமலையில் ஆர்ப்பாட்டம்

தாதியைத் தூற்றிய வைத்திய அதிகாரிக்கு எதிராக திருமலையில் ஆர்ப்பாட்டம்

தாதியைத் தூற்றிய வைத்திய அதிகாரிக்கு எதிராக திருமலையில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2016 | 3:15 pm

திருகோணமலை பொது வைத்தியசாலை தாதியர்கள் இன்று காலை 9.30 மணி முதல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வளாகத்தில் தாதியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வைத்திய அதிகாரியொருவர் தாதியொருவரை பொது இடத்தில் வைத்து தூற்றியதாகத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தாதியர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்