ட்ரம்ப் அதிபரானதால் மூன்றாம் உலகப்போர் தடுக்கப்பட்டுள்ளது: ரஷ்யா

ட்ரம்ப் அதிபரானதால் மூன்றாம் உலகப்போர் தடுக்கப்பட்டுள்ளது: ரஷ்யா

ட்ரம்ப் அதிபரானதால் மூன்றாம் உலகப்போர் தடுக்கப்பட்டுள்ளது: ரஷ்யா

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2016 | 4:34 pm

அமெரிக்க அதிபராக ஹிலரி கிளிண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டிருக்கக்கூடும், ட்ரம்ப் அதிபராகி இருப்பதால் உலகப்போர் தடுக்கப்பட்டுள்ளது என ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஆலோசகர் செர்ஜி கிலாயேவ் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளார்,

[quote]அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றிருப்பதை வரவேற்கிறோம். அமெரிக்காவின் முன்பு 2 வாய்ப்புகள் உள்ளன. இதில் முதல் வாய்ப்பு மூன்றாம் உலகப்போர். இரண்டாவது வாய்ப்பு உலக அமைதி. ஹிலரி கிளிண்டனைப் பொறுத்தவரை அவர் போரையே விரும்பினார். அவர் அதிபராகி இருந்தால் நிச்சயம் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டிருக்கும். ட்ரம்ப் அதிபராகி இருப்பதால் உலகப்போர் தடுக்கப்பட்டுள்ளது.[/quote]

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டதன் பின்னர் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பனிப்போர் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்