சிறுநீரகக் கடத்தல்: 5 இந்தியப் பிரஜைகளை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

சிறுநீரகக் கடத்தல்: 5 இந்தியப் பிரஜைகளை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

சிறுநீரகக் கடத்தல்: 5 இந்தியப் பிரஜைகளை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2016 | 3:24 pm

சிறுநீரகக் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து இந்தியப் பிரஜைகளையும் இந்த மாதம் 24 ஆம் திகதி, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுநீரகக் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச் சென்ற ஐந்து இந்திய பிரஜைகளும் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று (11) ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் ஐவரையும் இம்மாதம் 24 ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, மன்னார் நீதவான் ஆசீர்வாதம் கிரேசியஸ் அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.

இதேவேளை, குறித்த இந்திய பிரஜைகளுக்கு தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர், ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நான்கு இந்தியப் பிரஜைகள் பேசாலை பொலிஸாரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து மற்றுமொரு இந்தியப் பிரஜை தலைமன்னாரில் கைது செய்யப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்