சாமி மலையில் மண்சரிவு அபாயம் காரணமாக 30 குடும்பங்கள் இடம்பெயர்வு

சாமி மலையில் மண்சரிவு அபாயம் காரணமாக 30 குடும்பங்கள் இடம்பெயர்வு

எழுத்தாளர் Bella Dalima

12 Nov, 2016 | 6:00 pm

நுவரெலியாவில் சாமி மலை – சின்ன சூரியகந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 30 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.

சாமி மலை பெயர்லோன் தோட்டத்தின் சின்ன சூரியகந்த பகுதியில் நேற்று பெய்த மழை காரணமாக மண் சரிவு அபாயம் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

மண்சரிவு அபாயம் ஏற்படும் பகுதியிலுள்ள 46 பேர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இவர்களில் 20 பெண்களும் 10 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்