இலங்கை சம்மதித்தால் பாரதியின் கனவு நனவாகும்: பொன். இராதாகிருஷ்ணன்

இலங்கை சம்மதித்தால் பாரதியின் கனவு நனவாகும்: பொன். இராதாகிருஷ்ணன்

எழுத்தாளர் Bella Dalima

11 Nov, 2016 | 3:34 pm

இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே பாலம் அமைப்பதற்கு இந்தியா தயாராகவே இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சம்மதம் தெரிவித்தால் பாரதி கண்ட கனவு நிறைவேறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராமேஸ்வரத்தில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட வீதியொன்றைப் பார்வையிட சென்றிருந்தபோதே அவர் இதனைக் கூறியதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

புதுடில்லியில் நடைபெற்ற மீனவர்கள் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது, தமிழக – இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக மத்திய இணை அமைச்சர்  பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக அடுத்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 115 படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்