வரவு செலவுத் திட்டம் 2017: பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

வரவு செலவுத் திட்டம் 2017: பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

வரவு செலவுத் திட்டம் 2017: பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2016 | 2:07 pm

பி.ப 5.10 வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பு நிறைவு

பி.ப 5.01 100 பொருட்களுக்கு செஸ் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது

பி.ப 4.53 பயறு 15 ரூபாவால் குறைப்பு, நெத்தலி 5 ரூபாவால் குறைப்பு, 400 கிராம் உள்நாட்டு பால் மாவின் விலை 250 ரூபா, மண்ணெண்ணெய் 5 ரூபாவால் குறைப்பு, சமையல் எரிவாயு (கேஸ்) 25 ரூபாவால் குறைப்பு, வௌ்ளைச் சீனி 2 ரூபாவால் குறைப்பு, பருப்பு 10 ரூபாவால் குறைப்பு, உருளைக் கிழங்கு 5 ரூபாவால் குறைப்பு

பி.ப 4.50 சிறு குளங்களின் புனரமைப்பிற்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பி.ப 4.40 சுகாததாச விளையாட்டரங்கைப் புனரமைக்க 175 மில்லியன், தியகம விளையாட்டரங்கைப் புனரமைக்க 100 மில்லியன் ஒதுக்கீடு

பி.ப 4.37 அடுத்த வருடம் கொண்டாடப்படவுள்ள தேசிய வெசாக் உற்சவத்திற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பி.ப 4.35 தேசிய இளைஞர் அமைப்பு மற்றும் இளைஞர் படையணிக்கு 4000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பி.ப 4.34 ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் 1 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பி.ப 4.30 ஓய்வூதியத்திற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பி.ப 4.28 ஜன இசுர எனும் பெயரில் சமுர்த்தித் திட்டத்தை மீளமைக்கத் திட்டம்

பி.ப 4.26 அரச ஊழியர்களுக்கான விடுதிகளை (குவாட்டஸ்) அமைக்க 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பி.ப 4.24 வடக்கு, கிழக்கில் 50,000 வீட்டுத் திட்டத்தை அமைக்க 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பி.ப 4.22 தோட்டத் தொழிலாளர்களுக்கு 25,000 வீடுகள், அதற்கான காணிகள் மற்றும் ஏனைய சொத்துக்களை அரச செலவில் வழங்கத் தீர்மானம்

பி.ப 4.19 கிராமிய வங்கிகள் மற்றும் திவிநெகும வங்கிகளை ஒன்றிணைத்து சக்திமிக்க சிறு கடன் வழங்கும் வங்கிக் கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை

பி.ப 4.12 மின்சார கார்களைக் கொள்வனவு செய்வதற்கான கடனுதவிகளை வழங்க 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பி.ப 4.09 முச்சக்கரவண்டிகளால் ஏற்படும் விபத்தைக் குறைக்க  மின்சார கார்கள் அறிமுகப்படுத்தப்படும்

பி.ப 4.03 விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு 1,306 மில்லியன் ஒதுக்கீடு

பி.ப 4.01 வர்த்தகத் திணைக்களத்திற்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பி.ப 3.59 பதினைந்து ஏற்றுமதிக் கிராமங்கள் ஸ்தாபிக்கப்படும்

பி.ப 3.58 மெகாபொலிஸ் திட்டத்திற்கு 7500 மில்லியன் ரூபா நிதி அமைச்சில் இருந்து நேரடியாக ஒதுக்கீடு செய்யப்படும்

பி.ப 3.38 சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு 500 மில்லியன் பாதுகாப்புக் கடன் திட்டம்

பி.ப 3.30  இரவு 11 மணி வரைக்கும் தனியார்துறையினர் பஸ் போக்குவரத்தில் ஈடுபட இணக்கம்

பி.ப 3.28 அனைத்து மருந்தகங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்

பி.ப 3.26 தாதியர் கல்லூரிக்கு 200 மில்லியன் ஒதுக்கத் திட்டம்

பி.ப 3.21 வெளிநாட்டு மாணவர்கள் இலங்கையில் கல்வியைத் தொடர 5 வருடங்களுக்கு பல முறை சென்று வருவதற்கான விசா வசதி

பி.ப 3.19 பட்டமளிக்கும் அனுமதி தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்

பி.ப 3.18 கல்வித்துறையின் தரத்தினை உறுதிப்படுத்த விசேட குழு அமைக்கத் திட்டம்

பி.ப 3.16 உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் விசேட சித்தி பெற்ற மாணவர்கள் வெளிநாடுகளில் முதுமாணிப் பட்டப்படிப்பைத் தொடர வாய்ப்பு வழங்கப்படும்

பி.ப 3.15 பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை இரவு 8 மணி வரை முன்னெடுக்க நடவடிக்கை

பி.ப 3.14 கராப்பிட்டிய வைத்தியப் பீடத்திற்கு 10 மாடி புதிய கட்டடம் நிர்மாணிக்கத் திட்டம்

பி.ப 3.12 ருகுணு, பேராதனை, களனி, ஜயவர்தனபுர மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களில் கல்விமாணி பட்டப்படிப்பை ஆரம்பிக்க நடவடிக்கை

பி.ப 3.09 பாடசாலை மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய்க்கான காப்புறுதித் திட்டம் ஆரம்பிக்கப்படும்

பி.ப 3.08 அனைத்து மாணவர்களுக்கும் சேமிப்புக் கணக்கு ஆரம்பித்துக் கொடுக்கப்படும்

பி.ப 3.04 உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மடிக்கணனி மற்றும் TAB இலவசமாக வழங்கப்படும்

பி.ப 3.03 13 வருடங்களுக்கு கட்டாயக் கல்வி முறைமை

பி.ப 3.01 கல்வித்துறையை அபிவிருத்தி செய்ய மேலதிகமாக 17,840 மில்லியன் ஒதுக்கீடு

பி.ப 3.00 நீர் சோதனைக்காக 8 மாவட்டங்களுக்கு 200 மில்லியன் ஒதுக்கீடு

பி.ப. 2.58 உமா ஓயா, யான் ஓயாவின் அபிவிருத்திக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு

பி.ப. 2.56 மலர் செய்கையை ஊக்குவிக்க 50 வீதம் நிவாரணக் கடன்

பி.ப 2.55 1 கிலோ கோழி இறைச்சியின் அதிகூடிய விற்பனை விலை 420 ரூபாவாக நிர்ணயம்

பி.ப. 2.54 கிராமியக் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கோழி வளர்ப்பிற்கு 100 மில்லியன் ஒதுக்கீடு

பி.ப 2.52 100 ஒன்றிணைந்த நன்நீர் மீன்பிடி கிராமங்களை அமைக்கத் திட்டம்

பி.ப 2.50 மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் களப்புகள் மற்றும் மீனவர் கிராமங்களை அமைக்க 1200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பி.ப 2.49 கைத்தொழில் துறைக்காக 500 மில்லியன் ஒதுக்கீடு

பி.ப 2.48 பால் உற்பத்தி அதிகரிப்பிற்கு 400 மில்லியன் ஒதுக்கீடு

பி.ப. 2.45 மொனராகலை, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு உற்பத்தித் தொழிற்சாலைகள் அமைக்கத் திட்டம். கரும்பு பயிரிட அரச காணிகளை வழங்க நடவடிக்கை.

பி.ப 2.38 விவசாயிகளுக்கான சமுர்த்தி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை

பி.ப 2.37 தரிசு நிலங்களைப் பயனுள்ள வகையில் விவசாயத்திற்குப் பயன்படுத்துவதற்கான மானியம் வழங்கத் திட்டம்

பி.ப. 2.28 உயர் கல்வி அபிவிருத்திக்கு நடவடிக்கை

பி.ப 2.25 விவசாயத்திற்கான புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தத் திட்டம்

பி.ப. 2.24 உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

பி.ப 2.20 சமுத்திர வளத்தின் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்த எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் தெரிவிப்பு

பி.ப 2.17 பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி வருகை தந்துள்ளார்.

பி.ப.2.03  பாராளுமன்றத்தில் 70 ஆவது வரவு செலவுத் திட்டத்தை ரவி கருணாநாயக்க சமர்ப்பிக்க ஆரம்பித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்