வெலிசரயில் ஜோன் அமரதுங்க கலந்துகொண்ட நிகழ்வில் அமைதியின்மை

வெலிசரயில் ஜோன் அமரதுங்க கலந்துகொண்ட நிகழ்வில் அமைதியின்மை

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2016 | 7:22 pm

வெலிசர – மஹாபாகே பகுதியில் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கட்டடம் ஒன்றின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது அமைதியின்மை ஏற்பட்டது.

மஹாபாகே விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில் இந்த நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் அமைச்சர் ஜோன் அமரதுங்க கலந்து கொண்டிருந்தார்.

இடர் நிலைமைகளின் போது மக்களைத் தங்க வைப்பதற்காக அமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படும் இந்த கட்டடத்திற்காக 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும், இதற்காக விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்தியமைக்கு பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்