மொறட்டுவ, கல்கிஸ்ஸ பகுதிகளுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்

மொறட்டுவ, கல்கிஸ்ஸ பகுதிகளுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்

மொறட்டுவ, கல்கிஸ்ஸ பகுதிகளுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2016 | 10:30 am

கரையோர மார்க்கத்தின் மொரட்டுவ மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளுக்கு இடையிலான ரயில் போக்குவரத்தை இன்று இரவு 10 மணிமுதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பஸ்களை சேவையில் ஈடுப்படுத்தவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

மொறட்டுவை மற்றும் இரத்மலானை பகுதிகளுக்கு இடையிலான ரயில் மார்க்கத்திலுள்ள பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கமைய இன்று இரவு 10 மணி தொடக்கம் எதிர்வரும் 15 ஆம் திகதி மாலை 4 மணிவரை ரயில் போக்குவரத்து தடைப்பட்டிருக்கும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க குறிப்பிட்டார்.

அத்துடன் மொறட்டுவையிலிருந்து காலி வரையும், காலியில் இருந்து மாத்தறை வரையும் வழமைப் போன்று ரயில் போக்குவரத்து இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்